
பிரேம்குமார் குணரட்னம் தலைமையிலான ஜே.வி.பி கிளர்ச்சிக்குழு ஐக்கிய ஜனநயாக முன்னணியாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளது.
ஜே.வி.பி.யில் தொடர்ந்தும் அங்கம் வகிக்கப் போவதில்லை எனவும் தனியொரு அரசியல் சக்தியாக இயங்கப் போவதாகவும் கிளர்ச்சிக் குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசியல் கட்சி கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக முயல் சின்னத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜே.வி.பி. உறுப்பினர் திமுத்து அபயக்கோன் குறித்த கட்சியின் பொதுச் செயலாளராக கடமையாற்றுகின்றார்.
ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைமைக் காரியாலயம் இலக்கம் 51 பிலியந்தலை வீதி, மஹரகமவில் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment