Monday, October 24, 2011
மட்டக்களப்பு சிறைச்சாலையில் கடந்த சில தினங்களாக சுகயீனமுற்றிருந்த தமிழ்க் கைது ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தக் கைதியின் உடல்நிலை குறித்துச் சிறை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டும் அது கருத்தில் கொள்ளப்படாமை காரணமாகவே அவர் மரணமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வாழைச்சேனையைச் சேர்ந்த 35 வயதான இந்தக் கைதியின் உடல்நிலை குறித்து முன்னரே சிறைச்சாலை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது.குறிப்பிட்ட கைதி உணவை உட்கொள்ள முடியாத நிலையில் அவதியுறுவதாகவும் தொடர்ச்சியாக அவர் வாந்தி எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தும் ஆரம்பத்தில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத சிறை நிர்வாகம் அவரைக் காலதாமதாக நேற்றே மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதித்திருந்தது. இந்த நிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி நேற்றே உயிரிழந்தார்.
இதேவேளை, மட்டக்களப்புச் சிறைச்சாலை அதிகாரிகளின் இந்த அசமந்தப் போக்கைக் கண்டித்து மட்டு. சிறைச்சாலை கைதிகள் இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளனர் எனவும் தெரிவிக்க்பபடுகிறது.

No comments:
Post a Comment