Sunday, October 30, 2011இலங்கை யுவதிகளை விபசார நடவடிக்கைகளுக்காக மாலைதீவுக்கு அனுப்பிய குழுவொன்றை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் விபசார நடவடிக்கையில் ஈடுபடுவதற்காகச் சென்ற ஐந்து இலங்கைப் பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபசாரத்துக்காக இலங்கை யுவதிகளை மாலைதீவுக்கு அனுப்பி வைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் தனது 19 வயதான மனைவியையும் அதே தொழிலுக்கு அனுப்பி வைத்திருந்தமையையும் விசாரணைகளின் போது தெரிய வந்தது.
மாதாந்தம் பல தடவைகள் இலங்கையிலிருந்து மாலைதீவுக்கு யுவதிகளை இவர்கள் அனுப்பி வைத்திருந்தமையும் சுற்றுலா விசா ஊடாக அங்கு செல்லும் இவர்கள் சாதாரண மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பதும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. அத்துடன் இவர்கள் சுமார் ஐந்து வருடங்களாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டமையும் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து மேலும் தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment