Wednesday, October 12, 2011திருகோணமலை, உப்புவெளி பிரதேசத்தில் நேற்று மாலை இரு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. உப்புவெளி,அபயபுரம் மகளிர் கல்லூரியில் விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகளின் போதே அங்கு இரு கைக்குண்டுகள் காணப்பட்டன. இது குறித்து உப்புவெளி பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் இரு கைக்குண்டுகளையும் கைப்பற்றியதுடன் ஸ்தலத்துக்கு அழைக்கப்பட்ட இராணுவத்தின் குண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் பிரிவினர் அவற்றினைச் செயலிழக்கச் செய்துள்ளனர்
No comments:
Post a Comment