Saturday, October 22, 2011

மகிந்த ராஜபக்ஷவின் அவுஸ்திரேலிய விஜயத்தை தடுக்கும் வகையில் வழக்கு தாக்கல் செய்துள்ளவர் புலிகளின் மாலதி படைப்பிரிவின் முன்னாள் பெண் போராளி ஈழநதி!

Saturday, October 22, 2011
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அவுஸ்திரேலிய விஜயத்தை தடுக்கும் வகையில் அந்த நாட்டின் சமஷ்டி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளவர் புலிகள் அமைப்பின் மாலதி படைப்பிரிவின் முன்னாள் பெண் போராளியான ஈழநதி என தெரியவந்துள்ளது. மீனா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில், இலங்கைக்கு எதிராக போர் குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவர், அவுஸ்திரேலியாவின் ஏ.பி.சி தொலைக்காட்சிக்கு 9 நிமிட செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார்.

இவர் குருபரன் என்ற புலிகளின் ஆயுதப்படைப் பிரிவின் உறுப்பினரை திருமணம் செய்துள்ளதாக பாதுகாப்பு படையினர் கண்டறிந்துள்ளனர். ஈழநதி என்ற இந்த பெண், அவுஸ்திரேலி அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு தரப்பினரை தவறாகக வழி நடத்தி, இலங்கைக்கு எதிராக போர் குற்ற வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் இதற்கு புலிகளுக்கு ஆதரவான அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் ஆதரவு வழங்கியுள்ளதாகவும் அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை பொதுநலவாய அமைப்பில் இருந்து நீக்கும் நோக்கில், தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை விசாரணைக்கு எடுப்பதா இல்லை என்பது குறித்து, சமஷ்டி நீதிமன்றம் இன்னும் தீர்மானிக்கவில்லை. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ,பாலித கேஹோன, அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை தூதுவர் அத்மிரல் திஸர சமரசிங்க ஆகியோர் வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்றுள்ள ஈழநதி 2004 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததுடன், புலிகளின் சர்வதேச விவகார பொறுப்பாளர் காஸ்ரேவின் கீழ் பணியாற்றி வந்துள்ளார். வன்னியில் 6 மாத பயிற்சிகளை பெற்ற, அவர், மாலதி படைப்பிரிவில் பணியாற்றியதுடன், தமிழர் புனர்வாழ்வு கழகம், புலிகளின் சர்வதேச பிரசாரப் பிரிவுகளில் பணியாற்றி வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment