Thursday, October 13, 2011
நாட்டின் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மைக்குக் குந்தகம் ஏற்படுத்தும் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் சட்ட விதிகளை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர்கள் மற் றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதி பதி அவர்கள் உரிய வழிகாட்டல்களை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் நேற்றுத் தினகரனுக்குத் தெரிவித்தார்.
முல்லேரியாவில் நடைபெற்றுள்ள கசப்பான சம்பவத்தையடுத்து எழுந்துள்ள தற்போதைய சூழ்நிலையில் சட்டத்தை நூற்றுக்கு நூறு வீதம் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த தேர்தல் தினத்தன்று சனிக்கிழமை முல்லேரியாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் முன்னாள் பிரதியமைச்சரும் ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பிரிவிற்கான பணிப்பாளருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர படுகொலைச் செய்யப்பட்டார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பாக ஆறுபேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தி வரும் நிலையில் இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு நிச்சயமாக கடும் தண்டனை வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
விருப்பு வாக்குத் தேர்தல் முறையினால் ஏற்பட்ட மற்றுமொரு துரதிஷ்டவசமான சம்பவமாக இதனைக் குறிப்பிட்ட அமைச்சர், இச்சம்பவத்தை வைத்து நாட்டின் ஸ்திரத்தன்மைக்குக் குந்தகம் ஏற்படுத்துவதற்கு சில சக்திகள் முயற்சிகளை மேற்கொள்கின்றன என அவர் தெரிவித்தார்.
மேற்படி சம்பவத்தையடுத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 6,000பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸ் அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தின் விசேட படையினர் மற்றும் இராவத்தின் விசேட படையணியினரும் பொலிஸாருடன் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்பை நிலைநாட்டுவதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மெக்ஸி புரக்டர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் முல்லேரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இதுவரை ஆறுபேர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment