Friday, October 07, 2011பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் துப்பாக்கியுடன் பெலிஅத்த - நாவாரஹேன பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகிறது.
வழக்கு விசாரணைகளுக்காக குறித்த சந்தேகநபரை கைது செய்யுமாறு பண்டாரவளை, அவிசாவளை, கமபஹா, தங்காலை மற்றும் வலஸ்முல்ல ஆகிய நீதிமன்றங்கள் பிடியாணைகளை பிறப்பித்திருந்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
No comments:
Post a Comment