Sunday, October 23, 2011
புலிகளின் சர்வதேச வலையமைப்பின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு விசேட புலனாய்வுப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவுடன் புலிகள் வெளிநாடுகளில் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிராக மிகவும் அர்ப்பணிப்புடன் ஈட்டபட்ட வெற்றியை சீர்குலைப்பதற்கு சில வெளிச்சக்திகள் முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட புலி உறுப்பினர்களை மீண்டும் ஆயுதமேந்துவதற்கு தூண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படக் கூடுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தப்பிச் சென்ற புலி உறுப்பினர்கள் புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து செயற்படுவதாகவும், இதனைக் கண்காணிக்க விசேட புலனாய்வுப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment