Friday, October 07, 2011
மேல் மாகாணத்தில் அரச நிறுவனங்களில் அரச மொழிக்கொள்கை நடைமுறைப்படுத்தப்படுகின்றமை தொடர்பில் ஆராயும் கண்காணிப்புக்களை மேற்கொள்ள தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இதன்படி கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்தறை ஆகிய பிரதேசங்களிலுள்ள பொலிஸ் நிலையங்கள், வைத்தியசாலைகள், பிரதேச செயலகங்கள் உள்ளடங்கும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார தெரிவிததுள்ளார்.
இந்த நடவடிக்கைக்காக 75 கண்காணிப்பு குழுக்களை நியமிக்கவும் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அரச கருமங்களின்போது தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் பயன்படுத்தப்பட வேண்டும் எனபது அரசியல் அமைப்பில் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.
இதற்கமைய அரச நிறுவனங்களில் இந்த நடவடிக்கை உரிய முறையில் முன்னெடுக்கப்படுகின்றதா என்பதை பிரதேசவாரியாக ஆராய்வது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அமைச்சினால் நியமிக்கப்படும் விசேட கண்காணிப்பு குழுவினர் அரச நிறுவனங்களுக்குச் சென்று அரச மொழிக் கொள்கையின் நடைமுறை குறித்து மேற்பார்வை செய்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுக்களுக்கு உயர்கல்வி பயின்ற இளைஞர்களை நியமிக்கவும், அவர்களுக்கான பயிற்சிகளை வழங்கவும் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இவர்களிடமிருந்து கிடைக்கப்பெரும் அறிக்கைகளுக்கு அமைய அனைத்து அரச நிறுவனங்களிலும் அரச மொழிக் கொள்கையை உரிய முறையில் செயற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் இந்த திட்டம் நிறைவுபெற்றதன் பின்னர் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும் அதை விஸ்தரி்க்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மேலும் கூறினார்.

No comments:
Post a Comment