Tuesday, October 04, 2011ஜே.வி.பி நாளை கொழும்பில் ஏற்பாடு செய்துள்ள மாநாட்டிற்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அந்த கட்சியின் மாற்றுக்கொள்கையாளர் குழு தெரிவித்துள்ளது.
இந்த குழுவில் ஜே.வி.பியின் அரசியல் துறை குழு உறுப்பினர்கள் இருவரும், மத்திய செயற்குழுவின் சில உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக அதன் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறி;ப்பிட்டுள்ளார்.
அரசியல்துறை குழுவின் உறுப்பினர்களான புபுது ஜயகொடி மற்றும் திமுது ஆட்டிகல ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
அதேவேளை, மத்திய செயற்குழுவின் வருண தீப்தி ராஜபக்ஷ மற்றும் மேலும் சில உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
இந்தவிடயம் குறித்து ஜே.வி.பியின் பிரசார செயலாளர் நாடளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத்திடம் வினவப்பட்ட போது, எந்த ஒருவருக்கும் நாளைய தினம் இடம்பெறவுள்ள மாநாட்டில் பங்கேற்க முடியும் என தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஜே.வி.பிக்குள் கருத்து மோதல்கள் ஏற்பட்டதன் பின்னர் அந்த கட்சியின் பிரதான தலைவர் மக்களை சந்திக்கும் முதல் மாநாடு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment