Thursday, October 27, 2011
ஊர்காவற்துறை பிரதேச சபையின் உப தலைவர் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியினில் இருந்து தப்பித்துள்ளார். படு காயங்களுக்கு உள்ளான அவர் நேற்றிரவு யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரதேச சபையின் உப தலைவரான 33 வயதுடைய பரமலிங்கம் அருள்தரன் என்பவரே இவ்வாறு கொலை முயற்சியினில் இருந்து தப்பித்துள்ளார். (.10.2011) மதிய வேளை அனலைதீவிலுள்ள அருள்தரன் வீட்டிற்கு தனது சக பாடிகள் இருவர் சகிதம் சென்றுள்ள சந்தேக நபர் அனலைதீவிற்கு அருகாக உள்ள புளியச் தீவுப்பகுதிக்கு அவரை கடத்திச் சென்றுள்ளார். வாகனமொன்றிலேயே அருள்தரன் கடத்தி செல்லப்பட்டிருந்த நிலையில் அதனுள் வைத்து அவரை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சிகள் நடந்துள்ளன.
இந்நிலையில் வாகனத்திலிருந்து குதித்து தப்பித்துள்ள அருள்தரன் அருகிலுள்ள பொதுமகனொருவரது வீட்டினுள் தப்பிச்சென்று அடைக்கலம் புகுந்துள்ளார்.எனினும் அங்கும் துரத்தி வந்த கொலையாளிகள் அவரை தாக்கியுள்ளனர். அதனை தடுக்க முற்பட்ட வீட்டு உரிமையாளரையும் அவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். காயங்களுக்குள்ளான வீட்டு உரிமையாளரும் ஊர்காவற்துறை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார். படு காயங்களுக்குள்ளான அருள்தரன்; யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் இவர் ஊர்காவற்துறை பிரதேச சபையின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இதே வேளை தாக்குதலை நடத்திய முக்கிய சூத்திரதாரி ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏனைய இருவரும் தப்பித்துச் சென்றுள்ளனர்.

No comments:
Post a Comment