Tuesday, October 4, 2011

சீன புகலிடக் கோரிக்கையாளரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு!

Tuesday, October 04, 2011
சீன புகலிடக் கோரிக்கையாளரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சீனப் பிரஜை ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தில் தன்னை பதிவு செய்து கொண்டுள்ளார். பான் ஜூன் என்ற சீனப் பிரஜையே இவ்வாறு புகலிடம் கோரியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தில் பதிவு செய்து கொண்டுள்ள காரணத்தினால் வீசா காலாவதியானாலும் குறித்த சீனப் பிரஜை இலங்கையில் தங்கியிருக்க முடியும் என அவரின் சார்பில் ஆஜரான பூபாலசிங்கம் மற்றும் செரின் அகிலன் ஆகிய சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த புகலிடக் கோரிக்கையாளரை பிணையில் விடுதலை செய்ய முடியாது என நீதவான் லங்கா ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment