Monday, October 10, 2011
புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின்போது படையினர் இனவாதத்துடன் செயற்படவில்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.இலங்கை இராணுவத்தின் 62 ஆவது ஆண்டு நிறைவையொட்டி இன்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
உலக இராணுவங்களால் தோற்கடிக்க முடியாத பயங்கரவாத சக்தியாக புலிகள் அமைப்பு இருந்தது. எனினும் எமது ஜனாதிபதியின் தலைமைத்துவம் வழிநடத்திலின் கீழ் நாம் அதனைத் தோற்கடித்தோம். மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.
இலங்கை இராணுவத்தினர் மீது நாட்டை நேசிக்காத பலர் குற்றம் சுமத்துகிறார்கள். பயங்கரவாதத்துக்குத் துணைபோகும் பலர் வெளிநாடுகளில் இருந்துகொண்டு தவறான பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இலங்கை சுதந்திரமான நாடு. இங்கு அனைத்து மக்களும் சுதந்திரமாக வாழ முடியும். இராணுவத்தினர் இனவாதத்துடன் எப்போதும் செயற்படமாட்டார்கள் என்பதை நான் தெளிவாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன்" எனத் தெரிவித்தார்.

No comments:
Post a Comment