Monday, October 3, 2011

வியட்நாம் ஜனாதிபதி இலங்கை வரவுள்ளார்!

Monday, October 03, 2011
மூன்று நாள் உத்தியோகபூவ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வியட்நாம் ஜனாதிபதி ட்ரொன்க் டெரன்க் சென்க் இலங்கை வரவுள்ளார்.

எதிர்வரும் 13 ஆம் திகதி இலங்கை வரும் ஜனாதிபதி சென்க்குடன் வியட்நாம் வர்த்தக குழுவினரும் வரவுள்ளனர்.
இவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ள உள்ளனர்.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment