Tuesday, October 25, 2011

இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது – ஆஸி பிரதமர் திட்டவட்டம்!

Tuesday, October 25, 2011
அவுஸ்திரேலிய மத்திய அரசின் அனுமதியின்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக எந்த நாட்டின் எந்த ஒரு நீதிமன்றத்திலும் வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்ய முடியாது என அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் இன்று தெரிவித்துள்ளார் ஒரு நாட்டின் தலைவருக்கு எதிரான இவ்வாறான வழக்குகளை சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி தொடர முடியாது எனவும் அவுஸ்திரேலிய ஏபீசி வானொலிக்கு வழங்கிய பேட்டியில் ஆஸி. பிரதமர் கூறியுள்ளார்.

அத்துடன் இந்த வழக்கு குறித்து சட்டமா அதிபருக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை இந்த வழக்கு குறித்த எந்த ஆவணமும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்குக் கிடைக்கவில்லை என ஆஸி சட்டமா அதிபர் திணைக்களமும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் ரொபட் மிக்லேன்டின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கேதீஸ்வரனின் வழக்கறிஞரான ரொப் ஸ்டறி கூறியுள்ளார்

இலங்கையில் பிறந்த அருணாச்சலம் ஜெகதீஸ்வரன் என்பவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு எதிராக மெல்பேர்ன் நீதிமன்றில் யுத்தக் குற்ற வழக்குத் தாக்கல் செய்துள்ளமை தெரிந்ததே

No comments:

Post a Comment