Thursday, October 27, 2011
பாரீஸ் : முழுக்க முழுக்க சாக்லேட்டால் வடிவமைக்கப்பட்ட ஆடை திடீரென கழன்று விழுந்ததால் மாடல் அழகி அதிர்ச்சி அடைந்தார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சாக்லேட் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் சாக்லேட் திருவிழா நடத்தப்படுகிறது. 17-வது ஆண்டு திருவிழா தற்போது நடந்து வருகிறது. விழா தொடங்குவதை முன்னிட்டு சமீபத்தில் பிரத்யேக பேஷன் ஷோ நடந்தது. ஏராளமான அழகிகள் பங்கேற்றனர். வெள்ளை, பிரவுன் நிற சாக்லேட் பார்கள், முந்திரி, பாதாம் மற்றும் பிளம் போன்றவற்றை மட்டுமே பயன்படுத்தி அவர்களது ஆடைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. பிரான்ஸ் மாடல் அழகியும் டிவி அறிவிப்பாளருமான கேரின் பெரி (29) சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். சாக்லேட் பார்களால் செய்யப்பட்ட ஸ்கர்ட் அணிந்து அவர் மேடையில் தோன்றினார். பார்வையாளர்கள் மத்தியில் அவர் ஸ்டைலாக நடந்து வர.. ஸ்கர்ட்டின் முன்பகுதியில் இருந்த 2 சாக்லேட் பார் திடீரென கழன்று விழுந்தன. சற்றும் எதிர்பாராத கேரின், நாணமடைந்து கையால் மறைத்துக் கொண்டார். அடுத்தடுத்து மற்ற பார்களும் விழுந்தது. சாக்லேட் பார் பொருத்துவதற்கான வளையம் மட்டுமே பாக்கியிருந்தது.
அடுத்தடுத்து வலம் வர இருந்த அழகிகளின் சாக்லேட் உடைகள் விழாமல் நன்கு பொருத்தப்பட்டுள்ளதா என்று உடனே சரிபார்க்கப்பட்டது. அதன் பிறகே அவர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment