Friday, October 07, 2011
மட்டக்களப்பில் நடைபெறும் சர்வதேச வர்த்தக் கண்காட்சியினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று காலை (7.10.2011) வைபவ ரீதியாக அரம்பித்து வைத்தார்.
மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஆரம்பமான இவ் வர்த்தக கண்காட்சியின் ஆரம்ப வைபவத்தில் பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் பசீர் சேகுதாவூத், விநாயக மூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தன், தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி உட்பட கிழக்கு மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பில் நடைபெறும் இவ் வர்த்தக கண்காட்சயில் 150க்கு மேற்பட்ட காட்சி கூடங்கள் இங்கு அமைக்கப்பட்டு சர்வதேச, தேசிய, உள்ளுர் உற்பத்திகள் காட்சி வைக்கப்பட்டுள்ளதுடன் உயர் கல்வி நிறுவனங்களும் பங்குகொண்டுள்ளன.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தெரிழல் விவசாய சம்மேளனத்துடன் இணைந்து இக்கண்காட்சியினை நடாத்துகின்றது.
இன்று ஆரம்பமான இக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவடையவுள்ளது.

No comments:
Post a Comment