Friday, October 07, 2011
இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினருக்கு எதிராக யாழ்ப்பாண மக்கள் மேலும் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
ஏற்கனவே 22 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது மேலும் 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அண்மையில் யாழ்ப்பாணம் நாவந்துறையில் இடம்பெற்ற சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே தாக்கலை பரிசீலிப்பது குறித்து தீர்மானிப்பதாக அறிவிக்கப்பட்ட 27ம் திகதி இந்த மனுக்கள் பற்றியும் அறிவிக்கப்படும் என உச்ச நீதிமன்ற நீதவான்கள் அறிவித்துள்ளனர்.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க, நீதியரசர் பீ.ஏ. ரத்நாயக்க ஆகியோர் முன்னிலையில் இந்த மனு விசாரணை செய்யப்பட உள்ளது.
நாவந்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்களினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையினரும், இராணுவத்தினரும் அடக்குமுறைகளைப் பிரயோகித்ததாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
கிறிஸ் பேய் அச்சுறுத்தல்களே இந்த பிரச்சினைக்கான அடிப்படை காரணி எனத் தெரிவிக்கப்படுகிறது.
சில மனுதாரர்கள் பாதுகாப்பு அமைச்சரயும் பிரதிவாதியாக குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
30 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
யாழ். நாவாந்துறையில் கிறீஸ் பூதம் தொடர்பான பதற்றநிலையை தொடர்ந்து படையினராலும் பொலிஸாராலும் அப்பகுதி பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தாக்குல் தொடர்பாக மேலும் 30 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஏற்கெனவே 22 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சட்டத்தரணி எஸ்.எம்.எம். சம்சதீனுக்கு ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் நேற்று பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க, நீதியரசர் பி.ஏ. ரட்ணாயக்க, ஆகியோர் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. முந்தைய மனுக்கள் தொடர்பான வழக்கு விசாரணையுடன் இம்மனுக்கள் தொடர்பான விசாரணையும் ஒக்ரோபர் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஏ.சபாநாதன், ஆர்.பத்மநாதன், எஸ்.ராஜேஸ்வரன், வை. சிவகுமார், ஆர். தர்ஷன், ஏ. சார்ள்ஸ் அன்ரனி, ஏ. கிறிஸ்துராஜன், பி.பிரின்ஸ் லக்ஷ்மன், எஸ். டனிஸ்தன், ஈ. ஜீன்சன், ஜி.டபிள்யூ. ஜிம்பெனிஸ்டன், என். கிரிதரன், எம். மரியதாஸ், ஆர். மயில்வாகனம், ஆர். நிஷாந்தன், ஏ. ராஜநாயகம், எஸ். அன்ரனி, ஏ.எவ்.ராஜநாயகம், ஜோர்ஜ் நிரஞ்ஷன், போல் இமானுவல், எம். நிஜந்தன், ஜோன் பீற்றர் ராஜீவ், எம். கலிஸ்டன் ஆகியோரே இம்மனுக்களை தாக்கல் செய்தனர்.
11 மனுதாரர்கள் சார்பாக கே.எஸ்.ரத்னவேல் ஆஜரானார். 8 மனுதார்கள் சார்பாக பி.என். தம்பு ஆஜரானார். 6 மனுதார்கள் சார்பாக புவிதரன் ஆஜரானார். ஏனைய மனுதாரர்கள் சார்பாக புலஸ்தி ஹேவமான்ன, பாசிந்து சில்வா, சன்ஜீவ ரணவீர ஆகியோர் ஆஜராகினர்.பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் இவ்வழக்கில் ஒரு பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.இவ்வழக்கில் ஏற்கெனவே 22 மனுக்கள் சட்டத்தரணி மொஹான் பாலேந்திரா உடாக தாக்கல் செய்யப்பட்டு இது தொடர்பான விசாரணை ஒக்டோபர் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.

No comments:
Post a Comment