Saturday, October 29, 2011இலங்கையின் வரலாற்றிலேயே அதிகூடுதலான இளைஞர் படையணி இந்த வருடத்தில் பதிவானதாக ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் தெரிவிக்கிறது.
இந்த வருடத்தில் நாட்டின் இளைஞர் படையணி 56 இலட்சத்தை தாண்டடியுள்ளதாக ஐநா சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான துணைப் பிரதிநிதி காமினி வனசேகர கூறினார்.
150 வருட்ஙகளின் பின்னர் ஏற்பட்டுள்ள மிக முக்கியமான ஒரு சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நாட்டிலுள்ள இளைஞர் படையணி திறனை அதிகரிப்பதற்காக அரசாங்கத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment