Friday, October 07, 2011சட்ட விரோத போதைப் பொருள் காரணமாக கொழும்பு புறநகர் பகுதியில் வாழும் மக்கள் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுப்பதாக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இவர்களை இதில் இருந்து மீட்க, மதுவரி திணைக்கள அதிகாரிகளின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அளரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற மதுவரித் திணைக்களத்தின் 60வது ஆண்டு நிறைவு நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரில், வாழும் மக்கள் முகம் கொடுக்கும் இந்த பிரச்சினைக்கு வெகு விரைவில் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறும் அவர் கோரியுள்ளார்.
No comments:
Post a Comment