Thursday, October 27, 2011ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக தொடரப்பட்ட வழக்கு என இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கைகளை எடுக்க எவ்வித சந்தர்ப்பமும் இல்லை என அவுஸ்திரேலிய சட்டமா அதிபர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலிய சட்டத்தின் படி அப்படியான வழக்குகளை தாக்கல் செய்ய முடியாது என சட்டமா அதிபர் தெளிவாக ஏற்றுக்கொண்டுள்ளார். இதனால் வழக்கு ஆரம்பிக்கும் முன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு விட்டதாகவும் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment