Thursday, October 27, 2011

பாலியல் துஸ்பிரயோகம் - காவற்துறை பொறுப்பதிகாரி கைது!

Thursday, October 27, 2011
பதுளை மஹியங்கனை காவற்துறை நிலையத்தில் கடமையாற்றும் பெண் காவற்துறை அதிகாரி ஒருவரை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியதாக குற்றம்சுமத்தப்பட்டு அந்த நிலையத்தின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை காவற்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பதுளை காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்தே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் அங்கு முன்னதாக சேவையாற்றிய காவற்துறை பொறுப்பதிகாரி பதவி விலக்கப்பட்டிருந்தார்.

இதனை அடுத்து நியமிக்கப்பட்டிருந்த பதில் காவற்துறை பொறுப்பதிகாரியே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment