Sunday, October 09, 2011
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மாத்தாய், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள விஜயத்திற்கு முன்னதாக ரஞ்சன் மாத்தாய் ஜெயலலிதாவை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசாங்கத்தினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ரஞ்சன் மாத்தாய் கண்காணிப்பு செய்ய உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளிவிவகார செயலாளர் பதவியை ஏற்றுக் கொண்ட மாத்தாய், முதல் தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்கின்றார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இலங்கைக் கடறப்டையினரால் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில் இந்த விஜயம் அமைந்துள்ளது.
தமிழக முதல்வருடன் நடத்திய சந்திப்பு குறித்து ரஞ்சன் மாத்தாய் ஊடகங்களுக்கு எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

No comments:
Post a Comment