Saturday, October 22, 2011
இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியைக் கண்டித்து யாழ்.இந்தியத் தூதுவரிடமும் யாழ்.அரச அதிபரிடமும் மகஜர் கையளிப்பு!!
இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியை முற்றாகத் தடை செய்யக் கோரி வடமாகாண கடற்றொழிலாளர் சமாசப் பிரதிநிதிகள் இன்று வெள்ளிக்கிழமை யாழ்.இந்தியத் தூதுவரிடமும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிடமும் மகஜர் கையளித்துள்ளனர்.
வடபகுதிக்கடலில் இந்திய மீனவர்கள் பாரிய இழுவைப்படகுகள் மூலம் வடகடலின் வளங்களைச் சுரண்டிச் செல்கின்றனர். எனவே இந்திய மீனவர்களின் அத்துமீறிய அடாவடித்தனத்தை இந்திய, இலங்கை அரசுகள் தடுக்கவேண்டும் எனவும் தடுக்கத் தவறின் பாரிய ஜனநாயகப் போராட்டத்தை முன்னெடுத்து எங்களது கடல்களங்களைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வடமாகாண கடற்றொழிலாளர்கள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
வடபகுதி மீனவர் பிரச்சனைக்கு சாதகமான பதிலை இந்தியாவிடம் இருந்து பெற்றுத் தருவதாக யாழ்.இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளித்துள்ளார்.
யாழ்.இந்தியத் துர்துவரைச் சந்தித்த பின்னர் இலங்கை அரசாங்கத்தின் தூதுவரான யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமல்டா சுகுமாரைச் சந்தித்து தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரைக் கையளித்து விட்டு எங்களின் பிரச்சனையை இலங்கை அரசிற்கு அறிவிக்குமாறு கோரினர்.
வடமாகண மீனவர்களின் பிரச்சனையில் ஒரு தீர்வு கிடைக்கும் வரைக்கும் தான் இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுப்பதாக வடமாகாண கடற்றொழில் சமாசப் பிரதிநிதிகளிடம் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment