Sunday, October 2, 2011

வடபகுதி கண்ணிவெடி அகற்ற மேலும் 85 மில்லியன் - ஜப்பான்!

Sunday, ctober 02, 2011
இலங்கையின் வடபகுதியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் நோக்கில் ஜப்பான் அரசாங்கம் மேலும் சுமார் 85 மில்லியன் ரூபாவை உதவியாக வழங்க முன்வந்துள்ளது.

கண்ணி வெடியற்ற இலங்கையைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் இலக்கிற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கிலேயே ஜப்பான் இந்த நிதி உதவித் தொகையை வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நாடுகளில் ஜப்பான் பிரதான இடத்தை வகிக்கின்றது.

நாட்டில் உள்ளக இடம்பெயர்ந்தவர்கள் தமது சொந்த இடங்களுக்கு மீளத் திரும்புவதற்கும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குமான உதவிகளை ஜப்பான் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2003 ஆம் ஆண்டு முதல் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மக்களின் அடிப்படை பாதுகாப்பு கருதி கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு சுமார் இரண்டாயிரத்து 300 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது எனவும் அரசாங்கம் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment