Saturday, October 22, 2011
தாய்லாந்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மேலும் 34 இலங்கையர்கள் இன்று நாடுதிரும்பவுள்ளனர்.
பெத்தும் தானி பிரதேசத்தில் அமைந்துள்ள ஆசிய தொழிநுட்ப நிறுவனத்தில் கல்வி கற்றுவந்த மாணவர்களே சிலரே இன்று நாடுதிரும்பவுள்ளதாக தாய்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் ஜெனரல் ஷாந்த கோட்டேகொட தெரிவித்தார்.
குறித்த கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த 51 மாணவர்கள் ஏற்கனவே நாடுதிரும்பியுள்ளதாக அவர் தெரிவிக்கிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தேவையான வசதிகள் பெங்கொக் நகரில் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக பெங்கொக்கில் உள்ள இலங்கையின் வர்த்தகர்கள் ஒத்துழைப்பை வழங்கியதாகவும் தாய்லாந்துக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.
பெங்கொக்கில் நகரின் வடபகுதி செல்ல எதிர்ப்பார்த்துள்ள இலங்கையர்கள் தாய்லாந்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார்.
நாடு திரும்பும் மாணவர்கள் பெங்கொக் நகரின் நிலைமை வழமைக்கு திரும்பியதன் பின்னர் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் தாய்லாந்துக்கு வருவார்கள் எனவும் ஜெனரல் ஷாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment