Friday, October 7, 2011

இந்திய - பாக்.எல்லையில் ரூ.135 கோடி ஹெராயின் பறிமுதல்!.

Friday, October 07, 2011
அட்டாரி: பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள அட்டாரி கிராமம், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ளது. இந்த கிராமத்தில் நேற்றிரவு எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாகிஸ்தானிலிருந்து போதை மருந்து கடத்தல் கும்பலை சேர்ந்த சிலர் ஊடுருவ முயன்றதை பாதுகாப்பு படையினர் பார்த்தனர். உடனே அவர்களை நோக்கி கூட்டனர்.

அதிர்ச்சியடைந்த அந்த கும்பல், தங்களிடமிருந்த பொருட்களை அங்கேயே போட்டுவிட்டு தப்பியது. பாதுகாப்பு படையினர், அந்த பொருட்களை சோதனையிட்டனர். அதில் 27 கிலோ ஹெராயின் போதை பொருள்கள் இருந்தன.

இதன் மதிப்பு ரூ.135 கோடி. இந்த ஆண்டில் இவ்வளவு அதிக மதிப்புள்ள போதைப் பொருள் கைப்பற்றப்படுவது இதுவே முதல்முறை என்று எல்லை பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் பவன் சவுத்ரி தெரிவித்தார். நேற்று முன்தினம் இதே பகுதியில் 15 கிலோ ஹெராயினை, எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.75 கோடி ஆகும்.

No comments:

Post a Comment