Wednesday, September 28, 2011http://www.eta.gov.lk/; ஒன்பது மொழிகளில் இணையத்தளம்: 78 நாடுகளுக்கு online வீசா; 30ம் திகதி முதல் நடைமுறை!
2016 ஆம் ஆண்டில் 2.5 மில்லியன் சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதை இலக்காகக் கொண்டு 78 நாடுகளுக்கு இணையத்தளமூடாக online மூலம் வீசா வழங்கும் நடைமுறையை குடிவரவு- குடியகல்வு திணைக்களம் நாளை மறுதினம் 30 ஆம் திகதி முதல் அறிமுகம் செய்கிறது என திணைக்களத்தின் பிரதான கட்டுப் பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.
www.eta.gov.lk என்ற இணையத்தளத் தினூடாக வீசாவுக்கு விண்ணப்பிக்க முடியும். ஒன்பது மொழிகளில் இணயத்தளத்தைப் பார்வையிட முடியும். எனினும் விண்ணப்பதாரிகள் ஆங்கில மொழியில் மட்டுமே விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
கப்பல் மூலமாகவோ, விமானம் மூலமாகவோ வரும் சிங்கப்பூர் மற்றும் மலைதீவு பயணிகள் வழமை போன்று லிn தி rrival வீசா பெற்றுக் கொள்ள முடியும்.
No comments:
Post a Comment