Sunday, September 25, 2011

அதிபர் மெத்வதேவ் ஆதரவு மீண்டும் ரஷ்ய அதிபர் ஆகிறார் விளாடிமிர் புடின்!

Sunday, September 25, 2011
மாஸ்கோ: ரஷ்ய அதிபராக 2008ம் ஆண்டு வரை இருந்தவர் புடின். ரஷ்ய அரசியல் சட்டப்படி அதிபரின் அதிகபட்ச பதவிக் காலம் 4 ஆண்டுகள். அதுவும் ஒருவரே தொடர்ந்து 2 முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும். 2000 முதல் 2008 வரை தொடர்ந்து 8 ஆண்டுகள் அதிபராக புடின் இருந்தார். எனவே, அவர் 2008ல் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியவில்லை.

ஆளும் யுனைடெட் ரஷ்யா கட்சி சார்பில் மெத்வதேவ் அதிபர் பதவியேற்றார். பிரதமராக புடின் நியமிக்கப்பட்டார். புடினுக்கு ரஷ்யர்கள் இடையே தொடரும் அமோக ஆதரவையடுத்து அவரை மீண்டும் அதிபராக்கும் வகையில் அரசியல் சட்டத்தில் மெத்வதேவ் அரசு திருத்தம் கொண்டு வந்தது.

அதிபரின் அதிகபட்ச பதவிக் காலம் 6 ஆண்டுகளாக மாற்றப்பட்டது. இந்நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரஷ்ய அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதில் புடின் பெயரை கட்சி பொதுக்குழு பரிந்துரைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதை நேற்று ஆமோதித்த அதிபர் மெத்வதேவ், ‘‘புடின் பெயரை கட்சி பரிந்துரைத்தால் அதை மனதார ஒப்புக் கொள்வேன்’’ என்றார்.

No comments:

Post a Comment