Sunday, September 25, 2011

வென்னப்புவவில் மூன்று சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

Sunday, September 25, 2011
வென்னப்புவ மஹவெல மற்றும் கிரிந்திவெல ஆகிய பகுதிகளில் இருந்து மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வென்னப்புவ வாய்க்கால பகுதி மாஒயாவில் மிதந்துக்கொண்டிருந்த 19 வயது
இளைஞனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் கதிரான வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் என்பது விசாரணைகளின்பொது தெரியவந்துள்ளது. சடலத்தில் வெளிக்காயங்கள் எதுவும் காணப்படவில்லை என பொலிஸார்
கூறினர்.

இதேவேளை, மஹவெல மாரகம்முல்ல பகுதியிலுள்ள கிணறு ஒன்றினுள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் கூறினர்.

இதனிடையே கிரிந்திவெல பகுதியிலுள்ள கிணறு ஒன்றினுள் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் உளநலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவருடையது என்பது
விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தங்காலை மற்றும் மாரவில ஆகிய பகுதிகளில் கடலில் நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளனர். மாரவில கட்டுநேரிய கடலில் நீராடிக்கொண்டிருந்த 12 வயது சிறுவன் கடலலையில் அல்லுண்டு காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமற்போன சிறுவனை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது. இதேவேளை, தங்காலை சீனிமோதர கடலில் நீராடிக்கொண்டிருந்த சிறுவன் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சிலருடன் நீராடிக்கொண்டிருந்த சிறுவனே இவ்வாறு காணாமற்போயுள்ளான். இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனே நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment