Thursday, September 22, 2011ஐக்கிய நாடுகள் அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்றைய தினமும் பல நாட்டு அரச தலைவர்களை சந்தித்துள்ளார்.
இதன்போது இடம் பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், புருத்தாபனம், வட கிழக்கில் இடம்பெறும் நில கண்ணி வெடி அகற்றல் உள்ளிட்ட பல விடயங்கள் ஜனாதிபதி அரச தலைவர்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.
இதனிடையே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேபாள பிரதமர் பாபுராம் பட்ராவை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.
இதனிடையே ஜனாதிபதி, கொலம்பிய ஜனாதிபதி, ஜூவான் மெனுவலை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
இதற்கிடையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஈரான் ஜனாதிபதி மொஹமட் அஹமடின் நிஜாட்டை சந்தித்துள்ளார்.
இதன்போது ஈரானினால் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்று முன்தினம் நைஜீரிய, கிரிக்கிஸ்தான் உள்ளிட்ட பல நாட்டு தலைவர்களை ஜனாதிபதி சந்தித்திருந்தமை குறிப்பிடதக்கது
No comments:
Post a Comment