Sunday, September 18, 2011

மக்களிடையே புரிந்துணர்வை கட்டியெழுப்ப அரசாங்கம் முழுமையாக செயற்படுகிறது

Sunday, September 18, 2011
நாட்டு மக்களிடையே புரிந்துணர்வை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முழுமையாக செயற்படுவதாக, பிரதமர் டி.எம்.ஜயரத்ன இந்திய பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி முரளி மனோஹர் ஜோசியுடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

பிரதமரின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் பிரதமரை இந்திய பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி முரளி மனோஹர் ஜோசி இன்று சந்தித்தார்.

தேசிய நெருக்கடிக்கான தீர்வை எட்டுவதற்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளினதும் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

இலங்கை முன்னெடுத்துள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் ஒத்துழைப்பு பாராட்டத்தக்கதென பிரதமர் இதன்போது கலாநிதி முரளி மனோஹர் ஜோசி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் பாராட்டுவதாக இங்கு கருத்து வெளியிட்ட ஜோசி மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment