Sunday, September 18, 2011இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஹெய்ட்டிக்கு விஜயம் செய்ய உள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையில் கடமையாற்றி வரும் இலங்கைப் படையினரின் நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கும் நோக்கில் இராணுவத் தளபதியின் இந்த விஜயம் அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையின் இராணுவ ஆலோசகர் பபாகர் கேயைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் நியூயோர்க்கில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹணே மற்றும் பிரதிப் பிரதிநிதி சவேந்திர சில்வா ஆகியோரையும் இராணுவத் தளபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
No comments:
Post a Comment