Friday, September 2, 2011

ஜூடோ போட்டியில் வெற்றிபெற்ற மாணவிக்கு ஜனாதிபதி வாழ்த்து:-ஐக்கிய தேசிய கட்சியின் கிருஷாந்த மொல்லிகொட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில்!

Friday, September 02, 2011
இந்தியாவில் லக்னோவில் நடைபெற்ற எக்ஸ்போ ஜூடோ 2010 போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு ஜனாதிபதி நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றது.
கேகாலை ரிவிசந்த மத்திய மகா வித்தியாலய மாணவியான மதுராணி லியனகே 48 கிலே எடைப்பிரிவூ போட்டியில் முதலிடம் பெற்றார். அவருக்க ஜனாதிபதி வாழ்த்துத் தெரிவித்து பாராட்டினார்.

இந்தப் பாடசாலையின் ஆசிரியர்களும் மாவர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

கட்சியின் கிருஷாந்த மொல்லிகொட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில்!
ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் தெஹிவளை - கல்கிசை மாநகரசபையில் பிரதி மேயர் பதவிக்குப் போட்டியிடவிருந்த கிருஷாந்த மொல்லிகொட தனது ஆதரவாளர்களுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இன்று இணைந்துள்ளார்.

அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்காக பாடுபடவுள்ளதாக உறுதியளித்துள்ளார்.

No comments:

Post a Comment