Thursday, September 22, 2011இலங்கையில் அதி கூடிய மது குடிகாரர்களையும் (மது அருந்துபவர்கள்), மாகாணத்தில் அதிகூடிய புற்றுநோயாளர்களையும் கொண்ட மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டமாகும்.
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக பிரதேச சம்மேளன அலுவலர்களுக்கான நான்கு நாள் தலைமைத்துவ பயிற்சி நெறியின் இறுதி நிகழ்வு மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில் நேற்று 20.09.2011 செவ்வாய்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாற தெரிவித்தார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஏ.ஜீ.ஏ.கபூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பீ.பிரசாந்தன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண பணிப்பாளர் கே.தவராஜா உட்பட மன்றத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய பிரதியமைச்சர் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் பொருளாதார அபிவிருத்தியடைந்த மாவட்டமாக கட்டியெழுப்பப்படல் வேண்டும். இதற்காக ஒழுக்கமுள்ள ஒரு இளைஞர் சமுதாயத்தினை உறுவாக்கவேண்யுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு மதுவுக்காக முப்பது கோடி செலவு செய்யப்படுகின்றது. இந் நிதி எமக்கு கிடைக்குமாயின் எமது மாவட்டம் கல்வியிலும் சுகாதாரத்திலும் சிறந்துவிளங்கும். யுத்தத்திலேயே பிறந்து அஞ்சி, அஞ்சி பல்வேறு சூழ்நிலைகளுக்கு மத்தியில் வாழ்ந்த எமக்கு கிடைக்கப்பெற்ற சமாதானத்தை பாதூகாத்து தமது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நான்கு நாள் தலைமைத்துவ பயிற்சியினை முடித்துக் கொண்டவர்களுக்கு இதன் பொது சான்றிதல்களும் வழங்கிவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment