Tuesday, September 20, 2011

இந்திய அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது!.

Tuesday, September 20, 2011
வேலூர்: வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் கிராவிடாஸ் சர்வதேச அறிவுசார் தொழில்நுட்ப திருவிழா கடந்த 16ம் தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது. நேற்று நடந்த நிறைவு விழாவுக்கு விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி வகித்தார். கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.சி.சேதல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது: கடந்த ஒரு தலைமுறையாக ஆராய்ச்சிகளிலும், அணுசக்தி உற்பத்தியிலும் ஈடுபட்டு நாடு சாதனை படைத்து வருகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சிறந்த பொறியியல் வல்லுனர்களை அனுப்பும் நாடாக இந்தியா உள்ளது.

படித்து முடித்தவுடன் பொறியாளர்கள் வெளிநாடுகளில் பணியாற்ற அதிக ஆர்வம் காட்டுகின்றனர். வெளிநாடுகளில் உள்ள பொறியாளர்கள் தாய்நாட்டுக்கு திரும்பி வந்து நாட்டின் வளர்ச்சியில் ஆர்வம் காட்ட வேண்டும். அணுசக்தி உற்பத்தியில் நம் நாடு ஈடுபட்டுள்ளது.

இந்தியாவில் கல்பாக்கம் உள்ளிட்ட பிற இடங்களில் உள்ள அணுமின் நிலையங்கள் சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களை தாங்கும் விதத்தில் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அணுசக்தி நிலையங்களால் ஆபத்து ஏற்படும் என்று மக்கள் அச்சப்பட தேவையில்லை. நமது நாட்டின் மண்வளம், புவி அமைப்பு ஆகியவை பேரழிவுகளை எதிர்கொள்ளும் சக்தி படைத்தவை. இவ்வாறு சேதல் பேசினார்.

No comments:

Post a Comment