Saturday, September 10, 2011

ஹோமாகம ஹிரிபிட்டிய பகுதியில் மூவர் கொலை!

Saturday, September 10, 2011
ஹோமஹம ஹிரிபிட்டிய பகுதியில் மூவர் கொலை செய்யபட்டுள்ளனர்.

இந்தக் கொலைகள் தொடர்பாக இன்று காலை கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய விசேட குழுவொன்றை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்ததாக பொலிஸர் குறிப்பிட்டுள்ளனர். இவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கணவன், மனைவி மற்றும் குறித்த பெண்ணின் சகோதரர் ஆகியோரே கொலை செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த மூவரும் நேற்றிரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கணவன், மனைவி மற்றும் மனைவியின் சிறிய தம்பி ஆகியோரே இவ்வாறு கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment