Sunday, September 4, 2011

பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இலங்கைக்கு நெருக்கடி நிலையை ஏற்படுத்த புலிகள் முயற்சி!

Sunday, September 04, 2011
பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இலங்கைக்கு நெருக்கடியான நிலைமையை ஏற்படுத்த புலிகளின் ஆதரவு அமைப்புக்கள் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஒக்ரோபர் மாத இறுதியில் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டின் போது இலங்கைக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு புலி ஆதரவு அமைப்புக்கள் நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்படும் வரையில், பொதுநலவாய நாடுகள் பேரவையில் இலங்கை வகித்து வரும் அங்கத்துவத்தை இடைநிறுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் க்ளோபல் தமிழ் போராம் அமைப்பு உள்ளிட்ட சில அமைப்புக்கள் இவ்வாறு இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலும் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முயற்சிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டம் மற்றும் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் கூட்டம் ஆகியவற்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்பார் என வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

க்ளோபல் தமிழ் போராம் அமைப்பு இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் சுமத்தி வரும் அதேவேளை, புலிகளினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடுவதில்லை வெளிவிவகார அமைச்சின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment