Tuesday, September 20, 2011

போர்க் குற்றச்சாட்டு வெறும் வதந்தி; அதற்காக நான் நாடு திரும்பவில்லை!

Tuesday, September 20, 2011
நாடு திரும்புவதற்கும் யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கும் தொடர்பு இல்லை என்று ஜெர்மனி மற்றும் சுவிற்ஸர்லாந்துக்கான பிரதித் தூதர் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் தெரிவித்துள்ளார். மேலும் இந்தக் குற்றச் சாட்டுக்கள் அனைத்துமே வதந்திகள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்:

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 57 ஆவது பிரிவுப் படையணி மேற்கொண்ட போர்க்குற்றச் செயல்களுக்கு அதன் கட்டளைத் தளபதி ஜகத் டயஸ் பொறுப் பேற்க வேண்டும் என்று சில மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

ஆனால் பதவிக்காலம் முடிவடைவதனால் தாம் நாடு திரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தக் குற்றச்செயல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட காரணத்தால் நாடு திரும்புவதாக வெளியான தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை.

யுத்தக் குற்றச் செயல் விவகாரங்கள் தொடர்பில் சுவிற்ஸர்லாந்து அரச அதிகாரிகள் தம்மிடம் எந்தவித கேள்வியும் எழுப்பவில்லை.எனினும், சுவிற்ஸர்லாந்தின் பெர்மன் என்னும் நகரில் எனக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.புலிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக பிரதித் தூதர் பதவி வழங்கப்படவில்லை எனவும், ராஜதந்திர கடமைகளை ஆற்றுவதற்காகவே இந்தப் பதவி வழங்கப்பட்டது.

அடுத்த ராணுவத் தளபதியாகக் கூட பதவி வகிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவ தாகவும் அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment