Tuesday, September 27, 2011

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் நியமனத்தை விரைவுபடுத்த கோரும் தீர்மானம்:-நற்பிட்டிமுனை பாண்டிருப்பு வீதி நிர்மாணம்!

Tuesday, September 27, 2011
ஜப்பானின் ஜெயிக்காத்திட்டத்தின் நிதியொதுக்கிட்டின் கீழ் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி. நீர்ப்பாசனம். வீடமைப்பும் நிர்மாணம் . கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் 69 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள நற்பிட்டிமுனை பாண்டிருப்பு வீதிக்கான அங்குராப்பண நிகழ்வு
இடம்பெற்றது.

இவ்வீதிக்கான நினைவுப்படிகத்தினை உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சா ஏ.எல்.எம்.அதாவுல்லாவும் திட்டவரைபடத்தினை கிழக்கு மாகாண சபை உறுப்பினா் எம்.எல்.ஏ.துல்சான் மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தியமைச்சா் எம்.எஸ். உதுமாலெவ்வை ,கல்முனை மாநகர சபை வேட்பாளர்.ஏ.ஜி.நௌசாத் ஆகியோர் திரை நீக்கம் செய்து வைத்தனா.

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் நியமனத்தை விரைவுபடுத்த கோரும் தீர்மானம்:-

கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையில்லா பட்டதாரிகளின் நியமனத்தை துரிதமாக வழங்க ஜனாதிபதியை கோரும் தீர்மானமொன்று மட்டக்களப்பு மாவட்ட பட்டதரிகள் சங்கத்தினால் நேற்று எடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையில்லா பட்டதரிகள் சங்கத்தின் கூட்டமொன்று நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள நந்தகோபன் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ஐ.எம். பிரதீபன் மற்றும் உயர்கல்வி தேசியகணக்கியல் டிப்ளோமா வேலையில்லா பட்டதரிகள் சங்கத்தின் செயலாளர் உசைன் முபாறக் உட்பட அதன் நிருவாகிகள் உட்பட ஐநூறுக்கு மேற்பட்ட வேலையில்லா தமிழ் முஸ்லிம் பட்டதரிகள் இதில் கலந்துகொண்டனர்.

இதன்போது வேலையில்லா பட்டதரிகள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டன.

கிழக்கு மாகானத்திலுள்ள வேலையில்லா பட்டதரிகளுக்கு விரைவாக அரசாங்க நியமனங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக ஜனாதிபதியினால் அனுப்பப்பட்ட கடிதமொன்று இங்கு வாசிக்கப்பட்டது.

இதையடுத்து இந்நியமனத்தை துரிதமாக ஜனாதிபதி வழங்கவேண்டும் அதற்காக முயற்சிகளை மேற்கொள்வது என்ற தீர்மானம் இதன் போது எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment