Saturday, September 10, 2011இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக, தனது தலைமையில் அனைத்துக்கட்சி குழு இலங்கை செல்வதாக சுஷ்மாசுவராஜ் தெரிவித்தார்.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இரு சபைகளின் எதிர்க்கட்சி தலைவர்களான சுஷ்மாசுவராஜ், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ், இலங்கை தமிழர் பிரச்சினை நாடு முழுவதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பா.ஜனதா சார்பில் குரல் கொடுத்து இருந்ததாக தெரிவித்தார்.
கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த சுஷ்மாசுவராஜ், இந்த பிரச்சினை தொடர்பாக அவருடைய தலைமையில் அனைத்துக் கட்சி குழு ஒன்று இலங்கை செல்ல இருப்பதாகவும், அதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment