Saturday, September 10, 2011

அமெரிக்க காங்கிரஸ் முக்கியஸ்தர்களுக்கு வரவேற்பு– ஜாலிய விக்கிரமசூரிய!

Saturday, September 10, 2011
அமெரிக்க காங்கிரஸ் சபையின் முக்கிய உறுப்பினர்களுக்காக அமெரிக்காவிற்கான தூதுவர்

ஜாலிய விக்கிரமசூரியவினால் அண்மையில் வரவேற்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, இலங்கை தொடர்பிலான அமெரிக்காவின் கொள்கை மற்றும் யுத்தம் நிறைவடைந்த பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்பன குறித்து இந்த தருணத்தில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை தொடர்பில் உண்மையான மற்றும் சரியான நிலைமை குறித்து காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தியதாக ஜாலிய விக்கிரமசூரிய குறி;ப்பிட்டுள்ளார்.

அதேபோன்று, அமெரிக்காவினால் ஏனைய தரப்பினருக்கும் இலங்கை குறித்து சரியான தகவல்கள் முன்வைக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment