Saturday, September 24, 2011யாழ்-திருநெல்வேலியில் நேற்று இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது, பலத்த தாக்குதலுக்கு இலக்கான யாழ். போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த டாக்டர்கள் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,
திருநெல்வேலி கருவப்புலம் வீதியிலுள்ள டாகடர் வி. கணேஸ்வரனின் வீட்டுக்குள் முகமூடி அணிந்த நிலையில் சென்ற கொள்ளையர்கள் அவரையும் அவரது மனைவியான டாக்டர் க. ராணியையும் தாக்கி அச்சுறுத்தி விட்டு அங்கிருந்து பணம், நகை போன்றனவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கொள்ளையர்களின் தாக்குதலில் காயமடைந்த இருவரும் யாழ் போதனா வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது.இது இவ்வாறிருக்க, கொக்குவில் கோணவளையில் வங்கி ஊழியர் வீட்டுக்கும் சென்ற கொள்ளையர்கள் அவரைத் தாக்கி விட்டு பணம், நகை போன்றனவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
No comments:
Post a Comment