Wednesday, September 28, 2011உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் ‘ஜனசெவன உபகார’ கடன் வழங்கும் வைபவமும் கல்விப்பொதத்தராதர உயர் தர வகுப்பு மாணவர்களுக்கான கருத்தரங்கும் (27.9.2011) இன்று மட்டக்களப்பு டேர்பா மண்டபத்தில் நடைபெற்றது.
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அனுஷ்டிக்கப்படும் உலக குடியிருப்பு தினத்தையொட்டி தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு அலுவலகத்தினால் நடைபெற்ற இவ்வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட ரெசாங்க அதிபர் சந்தரம் அருமைநாயகம், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே.சிவநாதன், காத்தான்குடி கோட்டக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சுபைர் உட்பட மாணவர்கள் அதன் அதிகாரிகள் பயணாளிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது ஜனசெவன உபகார கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த 75பேருக்கு ரூபா ஐந்து இலட்சம் வீதம் முதற்கட்ட கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபாவுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
அத்தோடு குடியிருப்புக்களும் தேச சுவாத்திய மாற்றங்களும் எனும் தலைப்பில் மாணவர்களுக்கான கருத்தரங்கும் நடைபெற்றது.
No comments:
Post a Comment