Friday, September 9, 2011

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்கப்பிரிவு முகாமையாளர் அறையிலிருந்து தங்கமும் வெளிநாட்டு நாணயங்களும் மாயம்!

Friday, September 09, 2011
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்கப் பிரிவு முகாமையாளரது அறையிலிருந்து பல கோடி ரூபா பெறுமதிமிக்க தங்கமும் வெளிநாட்டு நாணயங்களும் களவாடப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கிறார்.

சட்டவிரோதமாக வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட பெறுமதியான பொருட்களும் இதில் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக விமான நிலைய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

களவாடப்பட்ட பொருட்களின் மொத்தப் பெறுமதியை அறிந்துகொள்வதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment