Wednesday,September 14,2011
இலங்கையை தனிமைப்படுத்துவதற்கு சில தீயசக்திகள் முயற்சிப்பதாக அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவிக்கின்றார்.
ஹங்குரான்கெத்த பிரதேசத்தில் புதி வீடமைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அமைச்சர் நேற்று இந்தக் கருத்தினை வெளியிட்டார்.
ஜெனீவாவில் உள்ள தீய சக்திகள் இலங்கைக்கு எதிராக பிரேரணைகளை நிறைவேற்றி நாட்டை தனிமைப்படுத்துவதற்கு முயற்சி செய்வதாக அமைச்சர் குற்றம் சுமத்தினார்.
இம்முறை அவர்களது திட்டம் கைகூடாமல் போகும் பட்சத்தில் அடுத்த மார்ச் மாதத்தில் நடைபெறும் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் அவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு நாட்டின் மீது அழுத்தம் கொடுக்க முயற்சிப்பார்கள் என அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் பயணம் முன்னெடுக்கப்பட வேண்டிய திசையை தீர்மானி்ப்பதற்கான அதிகாரம் ஜெனீவாவிலுள்ளவர்களுக்கு கிடையாது என வலியுறுத்திய அமைச்சர் விமல் வீரவங்ச நாடு பயணிக்க வேண்டிய திசையை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment