Friday, September 23, 2011

எதிர்க்கட்சியின் ஒற்றுமையின்மை கூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளது!

23rd of September 2011
எதிர்க்கட்சியின் ஒற்றுமையின்மை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள அதிகாரம் தொடர்பான பிரச்சினைகளும், மக்கள் விடுதலை முன்னணியில் காணப்படும் பிளவுகளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றியை இலகுப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் நன்மையடையவில்லை எனவும், நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் காரணமாக மக்கள் தம்மீது வைத்துள்ள நம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட பணம் தொடர்பில் மஹ்ரூப் சவால் விடுத்துள்ள நிலையில் அதற்கு பதிலளிக்க ரணில் தவறியுள்ளதாக குறிப்பிட்டார்.

தமக்கு விடுக்கப்படும் சவால்களை ஏற்றுக்கொள்ளாமல் பொருத்தமற்ற கருத்துக்களை வெளியிடுவதை எதிர்க்கட்சி தலைவர் தமது அரசியல் அனுகுமுறையாக பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment