Friday, September 02, 2011
வலிகாமம் வடக்கு பிரதேச செயலர் பிரிவில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கான வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நேற்று உலக விவசாய ஸ்தாபனத்தால் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்த மக்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வாழ்வாதார உதவிப் பொருட்களை ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் அவர்கள் வழங்கி வைத்தார்.
தெல்லிப்பளை பிரதேச செயலர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற வாழ்வாதார உதவிகளை கையளிக்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கருத்துரைகளை உலக விவசாயஸ்தாபனத்தின் மாவட்ட இணைப்பாளர் சிவானந்தன் பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் சிவகுமார் ஆகியோரும் நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உலக விவசாய ஸ்தாபனத்தின் உத்தியோகத்தர்கள் கிராம அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment