Sunday, September 25, 2011

ஜனாதிபதி - ஐநா பொதுச் செயலாளர் சந்திப்பு!

Sunday, September 25, 2011
நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் 66வது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூனை சந்தித்துள்ளார்.

பொதுச் சபைக் கூட்டத்தொடரை முன்னிட்டு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பணிப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பை அடுத்து மேலும் சில நாடுகளின் தலைவர்களையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment