Saturday, September 24, 2011ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் 66ம் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள இரு நாட்டுத் தலைவர்களும், நியூயோர்க்கில் இந்த பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர்.
நியூ யோர்க் பெலஸ் ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுவது தொடர்பில் இருநாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
குறிப்பாக தமிழர் பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பது என்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வது தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றம் மற்றும் ஏனைய யுத்த வலய புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்தியப் பிரதமருக்கு விளக்கமளித்துள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகள் குறித்தும் ஜனாதிபதி இதன் போது, இந்திய பிரதமரை தெளிவுபடுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment